சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை கொலை வழக்கு தொடர்பாக காவலர்கள் கைது செய்யப்பட்டனர், தற்போதுஇந்த வழக்குசி.பி.ஐவிசாரணையில் இருந்து வருகிறது..
இந்நிலையில் ஏற்கனவே இந்த சம்பவத்தில் உதவி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரைகரோனாபாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், கைது செய்யப்பட்ட காவலர்களில்ஒருவரான முருகனுக்கு கடந்த ஜூலை 28ஆம் தேதி கரோனாஉறுதிசெய்யப்பட்டது.மருத்துவ சிகிச்சைக்காக அவர் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது கரோனாபாதிப்பில் இருந்து மீண்ட அவர், மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.