Advertisment

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண விவகாரம்... கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் கோரி மனு 

sa

Advertisment

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம், கொலை வழக்காகப் பதிவு செய்து காவலர்கள் கைது செய்யப்பட்டு தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் பால்துரை என்ற SSI தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட வழக்கின் முக்கிய ஆவணங்களான காவல் நிலைய மெடிக்கல் மெமோ, அரசு மருத்துவரின் அறிக்கை, ரிமான்ட் ரிப்போர்ட் ஆகியவை மறைக்கப்பட்டுள்ளது, மேலும் ஜுன் 22 ஆம்தேதி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சார்பில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவில் ஜெயராஜ் நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோய் காரணமாக தொடர் சிகிச்சையில் தினசரி மருந்துகள் சாப்பிடுவதாகவும் பென்னிக்ஸ் கிட்னியில் கல் இருக்கும் நோயால் அவதி படுவதாகவும் கூறியுள்ளனர்.

Advertisment

காவலர் ரேவதி தயாரித்த மெடிக்கல் மெமோ மற்றும் அரசு மருத்துவர் அறிக்கையில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படவில்லை. அவற்றைப் பின்பற்றி மாஜிஸ்திரேட் ரிமான்ட் செய்துள்ளார். அனைத்து ஆவணங்களும் மறைக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கரோனா நோயால் இறந்திருக்கலாம். எனவே இந்த வழக்கில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத தனக்கு ஜாமின் வழங்குமாறு பால்துரை மனுவில் கூறப்பட்டுள்ளது.

incident jail sathankulam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe