SATHANKULAM ISSUES TN GOVT CBI

Advertisment

சாத்தான்குளம் தந்தை- மகன் மரணம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், சாத்தன்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (CBI) மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். முதல்வர் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி. கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், வழக்கு சி.பி.ஐ.- க்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.