தூத்துக்குடி,சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ்,பென்னிக்ஸ்ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்தசம்பவம் தொடர்பான வழக்கில்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
இந்நிலையில் சம்பவத்தின்போதுபணியில் இருந்தபெண் காவலரின் கணவர்தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்தபேட்டியில், “எனது மனைவிகாவல் நிலையத்தின் உள்ளே சென்றபோது இருவரையும் அடித்து கொண்டிருந்தனர். 10 மணி அளவில் தொலைபேசியில் பேசியபோது தந்தை, மகன் இருவரையும் அடித்து கொண்டிருப்பதாக கூறினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் தண்ணீர் குடிக்க கேட்டதாகஎனது மனைவிவருத்தத்துடன் கூறினார்.இருவர்உயிரிழப்பு தகவல் அறிந்து மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார் என பெண் காவலரின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்கூறுகையில்,எனது மனைவிக்கு தைரியம் கூறி அழைத்துச் சென்றேன். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாதுகாப்பு கேட்டும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.