சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம்.. போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு!!

Sathankulam incident..case on police

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ்ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி ஐஜி உயிரிழந்தஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டில் விசாரணை நடத்தினார்.

சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து நடுநிலையான ஒரு விசாரணை தொடங்கி இருக்கிறது. விசாரணை போகப்போக உங்களுக்கு முடிவு தெரியும். விசாரணை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. மாலை நேரத்திற்குள் உங்களுக்கு தெரிந்துவிடும் அல்லதுஇன்று இரவுக்குள் உங்களுக்கு முடிவு தெரியும். சாத்தான்குளம் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்படவுள்ளது. 12குழுக்கள் அமைக்கப்பட்டு தரமான விசாரணையைபல கோணங்களில் மேற்கொண்டு வருகிறோம்என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்திருந்தார்.

Sathankulam incident..case on police

பென்னிக்ஸின்செல்போன் கடைக்கும் நேரில் சென்று சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது பணியில் இருந்த,வழக்கில் சாட்சியம் அளித்தபெண் காவலரிடம், சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மேற்கொண்டார். அதற்கு முன்பாக அவர் கோவில்பட்டி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி கிளை சிறையிலும் சென்று ஆய்வு நடத்தி விசாரணைமேற்கொண்டார். அதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையமும் சிபிசிஐடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும் இந்த உயிரிழப்பு தொடர்பாக போலீசார் எஸ்.ஐ. ரகுகணேஷை சிபிசிஐடி போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

302 பிரிவு (கொலை) உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கஸ்டடியில் உயிரிழப்பு (176) என பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் 302 பிரிவு (கொலை) வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதேபோல் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளும் கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

case CBCID police sathankulam
இதையும் படியுங்கள்
Subscribe