சாத்தான்குளம் சம்பவம்... நீதிபதி நேரில் விசாரணை! 

Sathankulam incident ... Judge hearing in person!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையை தொடர்ந்துஇருவரும் உயிரிழந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதி நேரில் விசாரணை நடத்தி வருகின்றார்.கோவில்பட்டி சிறையில்தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தியநிலையில், தற்போதுநீதிபதி ஹேமா விசாரணை மேற்கொண்டு வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

incident police sathankulam
இதையும் படியுங்கள்
Subscribe