தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றஜெயராஜ்,பென்னிக்ஸ்ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்தசம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
இந்த வழக்கில்15 நாட்கள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா தற்பொழுது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் ஆகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட்பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.