சாத்தான்குளம் வழக்கில் சி.பி.ஐ பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

sathankulam incident high court madurai branch

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் மூன்று காவலர்கள் ஜாமீன் கோரிய மனு மீது விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்ஸ், முத்துராஜ் ஆகியோர் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தலைமைக்காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்ஸ், முத்துராஜ் ஆகியோருக்கு ஜாமீன் தர சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள்,சி.பி.ஐ தரப்பில் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது? எவ்வளவு நாட்கள் கூடுதலாக தேவைப்படும்? எனக் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து, சி.பி.ஐ விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை செப்டம்பர் 28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

high court madurai sathankulam Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe