சாத்தான்குளம் தந்தை-மகன்கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடிபோலீசாரால் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இன்று முதல் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடங்க உள்ளதாக நேற்று தகவல்வெளியானது.
இந்நிலையில் தற்பொழுது,சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடிக்குவருகை புரிந்துள்ளனர். சாத்தான்குளம் தந்தைமகன் வழக்கு தொடர்பாக விசாரிக்க, டெல்லியில் இருந்து,சிபிஐஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில், 8 பேர் கொண்ட குழுவினர் வருகை புரிந்துள்ளனர். டெல்லியிருந்துமதுரைவந்த சிபிஐ அதிகாரிகள் மூன்று கார்களில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் வந்தடைந்துள்ளனர்.