சாத்தான்குளம் சம்பவம்... சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!!

sathankulam incident... CATTV records handed over to court

சாத்தான்குளம் தந்தை-மகன்கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடிபோலீசாரால் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், நாளை முதல் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடங்க உள்ளதாக தகவல்வெளிவந்துள்ளது.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முதல் கட்டமாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.அதனையடுத்து நேற்று முன்தினம் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை செய்துவரும் சிபிசிஐடிஐ.ஜி சங்கர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் பறிமுதல் செய்த சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவுகளை நீதிமன்றமும், தடவியல் துறையும் ஆய்வு மேற்கொள்ளும். தந்தை, மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என்றார்.

CBCID CCTV footage sathankulam
இதையும் படியுங்கள்
Subscribe