Advertisment

'முதலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்...' -சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

sathankulam case

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகியோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரண்டு நாட்களாக சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீடு,அவரது உறவினர்கள், குடும்பத்தார் மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம் என பல்வேறு கட்டங்களாக விசாரணையை மேற்கொண்டு வந்திருந்த நிலையில்,அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் (காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன்,ரகு கணேஷ், காவலர்கள் முருகன்,முத்துராஜ் ஆகிய) 5 பேரையும், 7 நாள் காவலில்விசாரிப்பதற்காக சி.பி.ஐ. தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

அதனையடுத்து அந்த மனுவின் மீதான விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரைநீதித்துறை நடுவர்நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.இந்தமனுவின் மீதான விசாரணையில், காவலர்கள் 5 பேரையும் முதலில் நாளை காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் எனநீதிபதிஹேமானந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

CBI madurai high court case sathankulam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe