Advertisment

சாத்தான்குளம் வழக்கு... நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

 Sathankulam case ... Court orders filing of status report

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு இந்த வழக்குசி.பி.ஐ.க்குமாற்றப்படும் என தெரிவித்தது. ஆனால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவினால்உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில்விசாரணையில் இறங்கியநிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

Advertisment

தற்போது வரை சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக 5 காவலர்கள் சிறையிலிருந்து சி.பி.ஐ. காவலில் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.அதனையடுத்து மூன்று காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்சி.பி.ஐ. விசாரணைக் குழுவில் இருந்த 8 அதிகாரிகளில்7 அதிகாரிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதைக் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணை நிலைஅறிக்கையைசீலிட்ட கவரில்தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

CBI madurai high court sathankulam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe