தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கரோனா காலத்தில் நேரம் கடந்து கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலையத்தில், கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் 3 காவலர்களின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.