Advertisment

சாஸ்த்ரா கல்லுரி விவகாரம் - தொடர் போராட்டங்களில் களமிறங்குவோம் என பிஆர்பி எச்சரிக்கை

sas

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சாஸ்த்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்வெளியிட்டுள்ள அறிக்கை:

Advertisment

’’தஞ்சாவூர் சாஸ்த்ரா கல்லுரி கட்டிடம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தஞ்சை - திருச்சி சாலையை பாதிக்கும் வகையில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் 4 வழி சாலையில் சட்டத்திற்கு புறம்பாக கல்லூரி கட்டிடங்களை இடிக்க கூடாது என்ற உள்நோக்கத்தோடு கல்லூரி நிர்வாகத்தின் நிர்பந்தத்தால் சாலையையே வளைவு ஏற்படுத்தி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால் அன்றாடம் ஏராளமான சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. நான் தொடர்ந்து அந்த சாலையில் பயணம் மேற்கொள்வதால் ஆபத்தை உணர்ந்துள்ளேன்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

விபத்தால் உயிரிழந்த மாணவர்கள், பொதுமக்கள் பட்டியலை உடன் காவல் துறை வெளியிட வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டும்.

உடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை கையகப்படுத்துவதோடு, விபத்தை ஏற்படுத்தும் வகையில் வளைவாக அமைக்கப்பட்டுள்ள 4 வழி சாலையை நேர்வழியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்களில் களமிறங்குவோம் என எச்சறிக்கிறோம்.‘’

college Sastra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe