
சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும்பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும்பரப்பன அக்ரஹாராசிறையில் அடைக்கப்பட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார். மேலும் ஜனவரி மாதம் அவர் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் வரும் 27ம் தேதி அவர் விடுதலை ஆவது உறுதி ஆகியுள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வதகவல் தங்களுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)