/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/money-fraud.jpg)
தேர்தலில் சீட் வாங்கி தருவதாக வி.கே சசிகலாவின் உறவினர் ராஜராஜன் மீது பண மோசடி செய்ததாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 2016 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலின் போது சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில் போட்டியிட எம்.எல். ஏ சீட் வாங்கி தருவதாகக் கூறி சுமார் 5 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார். பின்பு சீட் வாங்கி தராமலும், வாங்கிய பணத்தைத்திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளார்.
இது சம்பந்தமாக இளவரசியின் இரண்டாவது மருமகனான ராஜராஜன் மீது பாதிக்கப்பட்ட சேலம் செம்மலை தோட்டத்தைச் சேர்ந்த என்.பி.கருணாகரன் சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார். அவர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜெ.பரத் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை அக்டோபர் 5ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)