


தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரைகள் நேற்று நிறைவடைந்தது. நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கடந்த இரண்டு நாட்களாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிலர் இதுவரை தங்களுக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்கள்.
இதுஒருபுறம் இருக்க, சசிகலாவின் பெயர் வாக்களார் பட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலா வாக்களிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.