மழை பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார் சசிகலா

 Sasikala will visit the rain victims tomorrow

தமிழகம் முழுவதும் பருவ மழை பெய்து வருகிறது; குறிப்பாகச் சென்னையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குக் கனமழை பெய்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களைச் சந்தித்து நிவாரணம் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், தொண்டர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலை அடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை சசிகலா பார்வையிட உள்ளார். தென்சென்னையில் தி.நகர் கிரியப்பா சாலையில் தொடங்கி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அசோக் நகர், விருகம்பாக்கம் வரை உள்ள பகுதிகளைப் பார்வையிடுகிறார் சசிகலா. அப்போது நிவாரண உதவிகளையும் செய்ய உள்ளார்.

மேலும், கோட்டூர்புரத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்துள்ள நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார் சசிகலா. அதே நேரம், அதே இடத்தில் அதிமுக சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓபிஎஸ் கலந்துகொள்கிறார். இந்த சூழலில், சசிகலாவும் ஓபிஎஸ்சும் சந்தித்துக் கொள்வார்களா ? என்கிற எதிர்பார்ப்பு அதிமுக தரப்பில் எதிரொலிக்கிறது.

sasikala
இதையும் படியுங்கள்
Subscribe