Advertisment

தேவி கருமாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு!

sasikala visit chennai temples

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, தண்டனை காலம் முடிந்த நிலையில்கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலையானார். அதைத் தொடர்ந்து சென்னை வந்த சசிகலா தி.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, பின்னர் திருச்சி, திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கு பிரசித்திப் பெற்ற கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, இன்று (11/04/2021) திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு சென்ற சசிகலா வழிபாடு நடத்தினார். பின்பு, கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.

Advertisment

Chennai sasikala temples
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe