sasikala visit... admk minister Jayakumar interview

Advertisment

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை கிளம்பி உள்ளார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர் தமிழக எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் சசிகலாவருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு''அதிமுகவில் எந்த ஸ்லீப்பர் செல்லும் இல்லை. அனைவரும் ஒன்றாக உள்ளனர். ஆனால் அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்'' என்றார்.

அதிமுகநிர்வாகி காரிலேயே சசிகலாவந்தது குறித்த கேள்விக்கு, '' அமைச்சர்கள், அதிமுக,மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள்''என்றார்.