Advertisment

மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சசிகலா!

Sasikala  took selfie with people!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தன்டனை முடிந்து தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக தெரிவித்த நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமைதி காத்து வந்த சசிகலா, கடந்து சில தினங்களாக ஆன்மிக தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார்.

Advertisment

அந்தவகையில், திருச்சி, திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சசிகலா சாமி கும்பிட வந்தார். அப்போது கோவில் நிர்வாகிகள் சசிகலாவிற்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலுக்கு சென்ற சசிகலா சாமி தரிசனம் செய்தார். மேலும் அக்கோவில் யானையிடம் ஆசி பெற்றார். இதனை அறிந்த பொதுமக்கள் அவரைப் பார்ப்பதற்காக ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆர்வமாக காத்திருந்தனர். சசிகலா சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் வந்ததும், அவருடன் சிலர் செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியதை அடுத்து அவர்களோடு செல்பி எடுத்துக்கொண்டார்.

Advertisment

sasikala temple trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe