திருச்சியில் கவனம் செலுத்தும் சசிகலா!

sasikala telephone conversation with admk party leaders audio released

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒத்தக்கடை செந்தில் என்று சொல்லக்கூடிய அ.தி.மு.க. நிர்வாகியும் சின்னம்மா பேரவையின் தலைவருமான செந்திலுக்கு சசிகலா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் கண்ணீர் மல்க மீண்டும் தலைமைக் கழகத்திற்கு வரவேண்டும் என்றும், துரோகிகளைத் துரத்த வேண்டும் என்றும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது மீண்டும் சசிகலா திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளரான அருள்ஜோதி தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அருள்ஜோதி சசிகலாவிடம் பேசுகையில், "கடந்த 25 ஆண்டு காலமாக துணைச் செயலாளராகவே கட்சியில் பதவி வகித்து வருகிறேன். திருச்சியின் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் ஜாதி அரசியலே.ஜெயலலிதாதிருச்சிதொகுதியில் தலித் எழில்மலையை வெற்றி பெறச் செய்தார். இந்த ஜாதி அரசியலை ஒழிக்க நீங்கள் நிச்சயம் திரும்பி வர வேண்டும்" என்றார்.

இந்த ஆடியோ தற்போது வெளியாகி திருச்சி அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

admk leader sasikala
இதையும் படியுங்கள்
Subscribe