Advertisment

"கட்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது"- சசிகலாவின் மற்றொரு ஆடியோவால் பரபரப்பு?

SASIKALA TALK WITH PARTY LEADER SECOND AUDIO

தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியதாக மற்றொரு ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

அந்த ஆடியோவில், "ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தக் கட்சி வீணாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் நிச்சயம் சீக்கிரம் வந்து விடுவேன்; அவர்கள் சண்டைப் போடுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. கரோனா தாக்கம் கொஞ்சம் குறைந்ததும் விரைவில் வந்து விடுவேன்; தைரியமாக இருங்கள்" என்று பேசியுள்ளார்.

Advertisment

அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கடந்த மார்ச் 3- ஆம் தேதி சசிகலா அறிவித்திருந்த நிலையில், நேற்று (29/05/2021) அவர் தொண்டர் ஒருவரிடம் பேசியது தொடர்பான ஆடியோ வெளியானது. இந்த நிலையில் சசிகலா தொண்டர் ஒருவரிடம் பேசுவது தொடர்பான இரண்டாவது ஆடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவின் ஆடியோவால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

audio sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe