Advertisment

"ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்" - சசிகலா பேச்சு!

Advertisment

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்துமலர்த்தூவி மரியாதைசெலுத்தினார். மேலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதைசெலுத்தினர்.

பின்னர் பேசிய சசிகலா, "நான் கரோனாவில் இருந்தபோது தமிழக மக்கள், கழக உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் நான் நலம்பெற்று தமிழகம் வந்தேன். அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு, ஜெயலலிதா நம்மிடம் சொல்லிவிட்டுச் சென்ற, மீண்டும் தமிழகத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும், நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று கூறிச் சென்றுள்ளார். அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள், ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும். அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள்; நிச்சயமாக இதைச் செய்வீர்கள், நானும் உங்களுக்குத் துணை நிற்பேன் என்பதை அன்போடு தெரிவித்து நன்றி கூறுகிறேன்" என்றார்.

அப்போது, “தொண்டர்களைச் சந்திப்பீர்களா?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சசிகலா, "விரைவில் நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க வருவேன்என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisment

சென்னை திரும்பியதும் சசிகலா பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

birthday jayalalitha sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe