சொத்துக்குவிப்பு வழக்கில்நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா இன்று (27.01.2021) காலை10.30மணிக்கு விடுதலையாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்பொழுதுபரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள்மற்றும்போலீசார்விக்டோரியா அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். சிறைத்துறை கண்காணிப்பாளர் லதாதலைமையிலான போலீசார், சசிகலாவிடம் கையெழுத்துபெற உள்ளனர். அதேபோல்சசிகலாவின்வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் மருத்துவமனைக்குவருகைதந்துள்ளார். சிகிச்சை பெற்றுவரும்சசிகலாவின்உடல்நிலை சீராக உள்ளது.சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும்,செயற்கை சுவாச கருவி உதவியின்றி இயல்பாக சுவாசிப்பதாகவும்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதேபோல் விடுதலையாகும் சசிகலாவை காண விக்டோரியா மருத்துவமனையின் வெளியே அவரதுஆதரவாளர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தத.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், “சசிகலாவின்விடுதலை அதிமுக வெற்றியைப் பாதிக்காது” என தெரிவித்துள்ளார்.