sasi puspa

Advertisment

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., சசிகலா புஷ்பா, ராமசாமியை திருமணம் செய்ய மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லியில் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனிமையில் டெல்லியில் வசித்து வந்தார். அதன்பின் அண்மையில், இருவரும் முறையாக விவகாரத்து பெற்றனர். இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கும், ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் ராமசாமிக்கும் வரும் 26ம் தேதி டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

Advertisment

இந்நிலையில், சத்யபிரயா என்பவர் தனது குழந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் டெல்லி ராமசாமி தனது கணவர் என்றும் தனக்கும் அவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது எனவும் கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில் ராமசாமி வேறு பெண்ணை திருமணம் செய்ய மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் எம்.பி., சசிகலா புஷ்பா, ராமசாமியை திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.