Advertisment

இனியும் தூத்துக்குடி மக்களை தொட்டால்... - சசிகலா புஷ்பா ஆவேசம்

sasikala pushpa

Advertisment

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் படுகாயம் அடைந்து 13 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா,

"ஸ்டெர்லைட் என்பது ஒரு நச்சு, புற்றுநோய் வரும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். பாதிப்பு வரும் என்பதற்காகத்தான் மக்கள் போராடுகிறார்கள். ஒரு மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு கெட்ட ஆலையை மூடு என்றுதான் கேட்கிறார்கள். மாவட்ட நிர்வாகமும், போலீசும் லஞ்சம் வாங்கிவிட்டீர்களா? ஏன் அந்த ஆலையை உங்களால் மூட முடியவில்லை. லஞ்சம் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை இருப்பதாலா? அதனால்தானே அந்த ஆலையத்திற்கு தைரியம் வருகிறது. எதனால் மூட முடியவில்லை. 12 பேரை கொலை பண்ணுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. மனித உரிமை எல்லாம் எங்கே போனது?

Advertisment

sasikala pushpa

100 நாட்கள் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏன் உங்களால் இந்த ஆலையை மூட முடியவில்லை. இன்னும் இந்த ஆலைகள் நடத்தப்படுமா? இதற்கு நிச்சயமாக சட்ட போராட்டம் நாங்க பண்ணுவோம். இனிமேல் ஸ்டெர்லைட் ஆலையை இங்கு நடத்த முடியாது. இத்தனை பேரை கொலை செய்து பணம் கொடுத்தா சரியா போச்சா? இவர்களையெல்லாம் கொல்ல சொல்லி யார் அதிகாரம் கொடுத்தது? மாவட்ட ஆட்சியர் மேல் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். எஸ்.பி. மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆகியோரிடமிருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு வந்ததா? யார் எது பண்ணாலும் அடிங்க, உதைங்க, கொலைபண்ணுங்க என்று சொன்னார்களா? இன்னும் சில பேரின் உடல்களே கிடைக்கவில்லை.

மக்கள் அரசு மருத்துவமனையைஎரிக்கிறார்கள் என்றால் அவங்க சும்மா எதையும் எரிக்கிறார்கள். அவர்களை ஏன் ஏவிவிடுறீங்க. 100 நாட்களுக்கு ஏன் பிரச்சனையை இழுத்துட்டு வருகிறார்கள்? ஒரு நாளில் உங்களால் இந்த பிரச்சனையை முடிக்க முடியாத நிர்வாகம் என்ன நிர்வாகம்? மக்கள் ஒன்னும் தப்பா போராடவில்லையே புற்றுநோய் ஏற்படுத்துற ஒரு ஆலையை மூட வேண்டும் என்று தான் சொல்லுகிறார்கள். ஒவ்வொரு வீட்டுலேயும் ஒரு சாவு விழுகிறது. அதை பார்த்துவிட்டு எப்படி சும்மா இருக்க முடியும். ஒரு நாள் மாவட்ட அலுவலகத்திற்கு பிரச்சனை வந்தா சுட்டுவிடுவீர்கள். அப்ப 101 நாள் போராட்டம் செய்தார்களே அவர்களுக்கு என்ன செய்தீர்கள்?

eps-ops

ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் பணம் கொடுத்துவிட்டாசரியா போச்சா? அவங்க குடும்பத்துக்கு என்ன பதில் சொல்ல போறீங்க. இது எல்லாம் ரொம்ப அநியாயம்.இனியும் தூத்துக்குடி மக்களை தொட்டால் அவ்வளவுதான்" -இவ்வாறு பேசினார்.

Condemned eps GunShot ops police sasikala pushpa Sterlite
இதையும் படியுங்கள்
Subscribe