Advertisment

தமிழ்நாடு முழுவதும் பருவ மழை பெய்துவருகிறது.குறிப்பாக, சென்னையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குக் கனமழை பெய்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களைச் சந்தித்து நிவாரணம் வழங்கிவருகிறார்கள். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று(12.11.2021) சசிகலா பார்வையிட்டார். தென்சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட சசிகலா, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.