Advertisment

'வீரன் வேல் வீசியது மதகரி மீது; சிறுநரி மீதல்ல தெரிகிறதா?'- டி.டி.வி.தினகரன் ட்வீட்   

ttv dhinagaran twit

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா நாளை தமிழகம் திரும்ப உள்ள நிலையில், சசிகலாஅதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அமைச்சர்கள் சார்பில் நேற்று இரண்டாம் முறை அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார்,சி.வி.சண்முகம் ஆகியோர் டிஜிபியைநேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை சார்பில் திடீர் எச்சரிக்கை அறிக்கை ஒன்றும் வெளியானது.அதில், குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரை போல தங்களைபாவித்துக்கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையில் எடுத்து,போக்குவரத்தையும் பொது அமைதியையும் பாதிக்கும் வகையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.இதுபோன்ற நடவடிக்கையால்சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதால் யாரும் செயலில் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

ttv dhinagaran twit

''எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என வளர்க்கப்பட்டவர்கள்.அந்த குடும்பத்தின் தலையீடுயில்லாமல்அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நூறு சதவிகிதம் ஓபிஎஸ் எங்களோடு தான் இருப்பார். திமுகவின் பீடீம் சசிகலா தான்''எனமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

ttv dhinagaran twit

இந்நிலையில் 'வீரன் வேல் வீசியது மதகரிமீது; சிறு நரி மீதல்ல தெரிகிறதா? என டிடிவி தினகரன் ட்வீட் வெளியிட்டுள்ளார். சசிகலாவை அமைச்சர்கள் விமர்சிக்கும் நிலையில் அறிஞர் அண்ணாவின் கவிதையை மேற்கோள் காட்டி டி.டி.வி.தினகரன் பதிவிட்டுள்ளார். 'வீசினான் என்றவுடன் வசை மொழியின் விருப்பம் தீரும்வரை விசாரம் குறையும் அளவு நானும் வீசவா என கேட்கத் தோன்றும். மாற்றார்போன போக்கில் ஏசுவது கேட்டா உனக்கு இந்த வாட்டம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டிடிவி தினகரன்.

admk jayakumar sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe