Advertisment

எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மரியாதை! 

Sasikala pays homage to M.G.R.

நடிகரும், அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ். மற்றும். இ.பி.எஸ். சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

இந்நிலையில், தி.நகர் நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சென்னையில் உள்ள தனது வீட்டில் எம்.ஜி.ஆர். உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து பேசிய சசிகலா, “தொண்டர்கள் துணையுடன் மக்களின் ஆதரவோடு மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டுவருவோம். ஒற்றுமையாக இருந்து எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என வலியுறுத்துகிறேன்” என்று பேசினார்.

sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe