Advertisment

தினகரன் மகள் திருமண விழாவில் சசிகலா பங்கேற்பு!

ரத

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத்தொகுதி முன்னாள் உறுப்பினருமான டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினி. இவருக்கும், தஞ்சாவூர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

Advertisment

சசிகலா வருகையை எதிர்பார்த்து திருமணதேதி முடிவு செய்யப்பட்ட நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக மேலும் சில மாதங்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவண்ணாமலையில் இந்த திருமணம் இன்று (16.09.2021) கோலாகலமாக நடைபெற்றது. பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாத சசிகலா, இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். மேலும், நடிகர் பிரபு தன் குடும்பத்தினருடன் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

Advertisment

sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe