Advertisment

கரோனாவிலிருந்து சசிகலா மீண்டுவர வேண்டும்; மன்னார்குடியில் யாகம்! 

Sasikala must return from Corona; Sacrifice in Mannargudi!

சசிகலா கரோனாவிலிருந்து விரைவில் பூரண குணமடைந்து தமிழகம் திரும்ப வேண்டும் என மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தினரும், அமமுகவினரும்சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் செய்தனர்.

Advertisment

Sasikala must return from Corona; Sacrifice in Mannargudi!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா,தண்டனைகாலம் முடிவடைந்து விடுதலையாகும் நிலையில் இருக்கிறார். இந்தச் சூழலில்,சசிகலாவிற்கு மூச்சுத்திணறல்ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கரோனாதொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

Sasikala must return from Corona; Sacrifice in Mannargudi!

அவர் விரைவில்பூரண குணம் அடைந்து தமிழகம் திரும்பவேண்டிஅமமுகவினர் சார்பில் பல இடங்களில் பூஜை, யாகங்கள்நடந்துவருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தினர், ஜெயம்கொண்ட நாதர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.அதே நிமிடம் அமமுகவினர் ராஜகோபாலசுவாமி கோவிலில், ராஜகோபாலசுவாமி மற்றும் செங்க மலத்தாயார் சுவாமிக்கு சிறப்புப் பூஜை வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

corona sasikala Mannargudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe