Advertisment

பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த சசிகலா!

Sasikala met Panrutti Ramachandran!

Advertisment

அதிமுகவில் பல்வேறு முட்டல் மோதல்களுக்கு பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, பின்னர் அது தொடர்பான வழக்கில் எடப்பாடி தரப்பிடம் சாவியை உயர்நீதிமன்றம் ஒப்படைத்தது.

இந்நிலையில் மறுபுறம் அதிமுகவை மீட்க போவதாக சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் அவரது சகோதரர் திவாகரனும் அவரது கட்சியை சசிகலாவுடன் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் சசிகலா சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை அசோக் நகர் இல்லத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

sasikala admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe