புதுக்கோட்டையில் செய்தியாளர்கள்சந்திப்பில்,சிறையிலிருந்து வெளியேவந்தாலும் சசிகலா நேராக வீட்டுக்குத்தான் செல்லவேண்டும் அதிமுகவில் அவருக்குஇடமில்லைஎன தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

admk

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமுள்ளதா என்றசெய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது. புதுக்கோட்டையில் வனத்துறை நட்ட யூக்லிப்டஸ் மரங்களை அகற்றுவது பற்றி வரும் 10 ஆம் தேதி மக்களிடம்கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி முடிவெடுப்போம்.சுற்றுசூழலுக்கு தீமை பயக்கும் என மக்கள் கருதினால் யூகலிப்டஸ் மரங்களை மக்களின் கருத்துக்களை கேட்டு அகற்றுவோம் என கூறினார். அதேபோல் வெளிநாடுகளில் உள்ள தொழிநுட்பத்தை பயன்படுத்திவனத்தில் ஏற்படும் காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறினார்.