சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சசிகலாவின் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சைபெற்று வரும் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அறிகுறி இல்லாத கரோனாவுக்கு சிகிச்சைபெறும் சசிகலாவின்உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. அவர் நான்காவது நாளாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியின்றி இயல்பாக சுவாசித்து வருகிறார். சசிகலாவின் உடலில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை இயல்பான அளவிலே உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.