சசிகலா நாளை டிஸ்சார்ஜ்!

sasikala disharge for tomorro hospital statement

கரோனா தொற்று, நுரையீரல் பாதிப்பு காரணமாக, கடந்த 10 நாட்களாக சிகிச்சைபெற்று வரும் சசிகலா, மருத்துவமனையில் இருந்து நாளை (31/01/2021) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சசிகலாவின் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சைபெற்று வரும் விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா தொற்றில் இருந்து மீண்டதால் நாளை (31/01/2021) காலை 10.00 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரின் உடல்நிலை சீராகவும், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிலும் உள்ளது' எனத்தெரிவித்துள்ளது.

டிஸ்சார்ஜ் ஆன பிறகு பெங்களூருவில் சில நாட்கள் சசிகலா தங்கியிருப்பார் என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் தமிழகம் திரும்புவார் என்றும்தகவல் கூறுகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனைபெற்ற சசிகலா, கடந்த 27- ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்த அவர், நாளை (31/01/2021) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

DISCHARGED hospital sasikala
இதையும் படியுங்கள்
Subscribe