saasi

Advertisment

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் நள்ளிரவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எம்.நடராஜன், கடந்த 16-ம் தேதி, சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து நள்ளிரவு 1 மணி 35 நிமிடத்தில் உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளது.

Advertisment

இதற்கிடையே நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சிறை நடைமுறைகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகல் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டார்.

சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும், சென்னைக்கு செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.