ஜெயலலிதா வாகனத்தில் வந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திய சசிகலா! 

Sasikala who came in Jayalalithaa's vehicle and paid homage to   Muthuramalingam!

முத்துராமலிங்கத் தேவரின்114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். நாளை (30.10.2021) பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - அமமுக தொண்டர்களிடையே குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு, இன்றே மரியாதை செய்தார்.

முன்னதாக, தஞ்சையிலிருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்திருந்த அவர், தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு அதிமுக கொடியுடன் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.இன்று காலை ஓட்டலில் இருந்து கிளம்பியவர், ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் மதுரை கோரிப்பாளையம் வந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக, அமமுக கொடியுடன் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அந்தப் பிரச்சார வாகனத்திலேயே மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், சசிகலா பசும்பொன் சென்றார்.

Muthuramalingam Thevar sasikala
இதையும் படியுங்கள்
Subscribe