SASIKALA BENGALUR GOVERNMENT HOSPITAL

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு நேற்று (20.01.2021) மதியம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கரோனா இல்லை என தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

Advertisment

இந்நிலையில் சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் சென்றபோது, மருத்துவமனையின் வெளியே சக்கர நாற்காலியில் இருந்த படி, மருத்துவமனை முன் திரண்டிருந்த உறவினர்கள், தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் சசிகலா.

Advertisment

அதைத் தொடர்ந்து, சசிகலா சி.டி. ஸ்கேன் எடுக்க பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.