Sasikala Audio ... Edappadi Palanisamy meeting

அதிமுகவை கைப்பற்றப் போவதாக சசிகலா தொடர்ச்சியாக தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகிவரும் நிலையில், ஏற்கனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் சசிகலாவுடன் ஃபோனில் பேசிய அதிமுக நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

Advertisment

அதேபோல் மாவட்டவாரியாக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இந்நிலையில், சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சசிகலாவின் ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றுவருகிறது.