sasikala

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க தீர்மானத்துள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், சசிகலாவை மட்டுமல்ல அப்பொழுது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர் மற்றும் முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

Advertisment

இதில் சசிகலாவிடம் கேட்பதற்கு பல கேள்விகளை தயாரித்து முன்வைத்துள்ளது ஆணையம்.

Advertisment

அதில் முக்கியமானது, ஜெயலலிதாவின் உயிர் பிரிவதற்கு காரணமாக இருதய நிறுத்தம் கார்டியாக் அரெஸ்ட் வரும்போது சசிகலா அங்கு இல்லை மற்றும் ஜெயலலிதாவின் மார்பு பகுதியில் இயந்திரங்கள் மூலம் மசாஜ் செய்து அவரது இதயத்தை இயக்க முயற்சித்த வேலைகளை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள்தான் செய்திருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு இருதய நிறுத்தம் வரும்போது சசிகலா எங்கிருந்தார்?. அவரது இருதய நிறுத்தம் வந்தபோது அதை இயங்க வைக்கும் முயற்சியில் அப்பல்லோவின் சீனியர்கள் மருத்துவர்கள் ஈடுபடாமல் உதவியாளர்களாக இருந்த அலுவலர்கள் ஏன் அதை செய்தார்கள்? என்கிற மிக முக்கியமான கேள்வியை சசிகலாவிடம் கேட்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Advertisment

இத்துடன் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்க சசிகலா ஏன் அனுமதிக்கவில்லை? ஜெயலலிதாவின் உறவினரான தீபக் மருத்துவமனையில் இருக்கும்பொழுது ஜெயலலிதாலவின் உறவினரே அல்லாத சசிகலா உறவினர் என ஏன் கையெழுத்து போட்டார்? என்கிற மற்றொரு கேள்வியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் சசிகலாவிடம் கேட்கப்பட உள்ளது.

இந்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதிலையொட்டித்தான் ஜெ.வின் மருத்துவ சிகிச்சையில் சசிகலாவின் பங்கு என்ன என்பதை பற்றிய பதிலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தயாரிக்க உள்ளது.