Advertisment

ஆப்பிள் மாலையுடன் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு!

sasikala arrives tamilnadu ammk leaders

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா தற்போதுதண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில், இன்று (08/02/2021) காலை பெங்களூருவிலிருந்து சென்னை கிளம்பியுள்ளார். காலை 07.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர் தமிழக எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார். அவரது வருகையையொட்டி தமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் வரும் வழியில் அவருக்குப் பல்வேறு இடங்களில் அவரது தொண்டர்கள் அவர் பயணிக்கும் கார் மீது பூத்தூவி வரவேற்றனர். தற்பொழுது அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதிக்கு வந்தபோதுபொக்லைன் இயந்திரம் மூலம் 500 கிலோ ஆப்பிள் மற்றும் மலர் மாலையுடன் சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வந்துகொண்டிருக்கும் வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

Advertisment

ammk Tamilnadu sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe