/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasikala7896.jpg)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில் இன்று (08/02/2021) காலை பெங்களூருவிலிருந்து சென்னை கிளம்பியுள்ளார். காலை 07.30 மணியளவில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர் தமிழக எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார். அவரது வருகையையொட்டி தமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வழிநெடுகிலும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், பெங்களூருவிலிருந்து 14 மணி நேர பயணத்திற்குப் பிறகு தற்போது ராணிப்பேட்டையைக் கடந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார் சசிகலா. தொண்டர்களின் மகிழ்ச்சி, ஆரவாரத்துடன் சென்னை பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
சசிகலா இன்னும் இரண்டு மணி நேரத்தில் சென்னை வந்து விடுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன. அவரை வரவேற்பதற்காக சென்னையில் பல்வேறு இடங்களில் அ.ம.மு.க.வினர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)