/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasikala_8.jpg)
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து தமிழக அரசால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் இதுவரை 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிசை அளித்த டெல்லி எய்ம்ஸ், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவெடுத்தது.
அதற்காக, பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டதால், ஜெ.மரணம் தொடர்பாக 55 பக்கங்கள் கொண்ட பிரமானப்பத்திரம் சசிகலா சார்பில் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும், சசிகலாவை நேரில் விசாரிக்க ஆணையம் முடிவெடுத்துள்ளதால் தமிழக உள்துறை மற்றும் பெங்களூர் சிறை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)