மதுஒழிப்புப் போராட்டத்தில் உயிரிழந்த சசிபெருமாளின்5-ஆம் ஆண்டு நினைவு தினம் 31.07.2020 வெள்ளிக்கிழமை சென்னையில் அனுசரிக்கப்பட்டது. காந்தியவாதி சசிபெருமாளின் ஆதரவு மது ஒழிப்புப் போராளிகள்,சுந்தர் ஒருங்கிணைப்பில் சசிபெருமாளுக்கு வீீரவணக்கம்செலுத்தினர்.

Advertisment

இந்நிகழ்வில், கரோனா வைரஸ் பாதிப்பில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மரண பயத்தில் வாழ்கிறார்கள். இச்சமயத்தில்மதுக்கடைகள்திறந்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சசிபெருமாள் உயிரிழப்புக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

Advertisment

இந்நிகழ்வில் பெண்ணுரிமை இயக்கம் தலைவர் கீதா, வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம், வழக்கறிஞர் எம்.எல்.ரவி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,இயக்குநர் போஸ்கோ, கடலோர பாதுகாப்பு இயக்கம் தலைவர் ஜெ.ஜெயகுமார், மக்கள் அதிகாரம் மருது, வெற்றிவேல், ஜாகீர்கான், சுதிர், தனசேகரன் லயோலோ மணி, அரிஅகிலன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.