ADVERTISEMENT

சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு

10:35 PM Nov 01, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘’நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக விஜய் நடித்த சர்கார் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படம் மதுரையில் 5க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகிறது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூபாய் 500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1000 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பது விதிமீறல். 16.10 2017 ஆம் ஆண்டு உள்துறை ( சினிமா ) வெளியிடப்பட்ட அரசாணையில் கட்டணங்கள் குறித்து வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலீக்கபட வேண்டும் எனவும், மற்ற திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், ஏசி திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என்றும் அரசாணையில் உள்ளது. ஆனால் அரசாணையை பின்பற்றாமல் பலமடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மதுரையில் உள்ள தனியார் அமைப்புகள் மூலம் சர்கார் படத்தின் ஒரு டிக்கெட் ரூபாய் 1000 வரை விற்கப்படுகிறது.

இந்த சினிமா டிக்கெட் கட்டணம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறது. இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் ஜிஎஸ்டி வருவாய் குறைய வாய்ப்புள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017 ல் உள்துறை செயலர் ( சினிமா ) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உரிய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜா,கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளபடும்.கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முறையாக உரிய நடவடிக்கை எடுக்கபடும் என அரசுதரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், " மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி வழக்கினை முடித்துவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT