Advertisment

அந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’!

sar

Advertisment

விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. 1.33 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில், வெளிநாட்டிலிருந்து விஜய் ஓட்டு ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக வருகிறார். ஆனால், அவர் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.

நடிகர் சிவாஜி கணேசன் ஓட்டு போட சென்றபோது அவர் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்ட சம்பவம் தமிழ்நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஒரு பொறியில்தான் இந்த படத்திற்கான கதையைஉருவாக்கினேன் என்று படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியது நினைவுக்கு வருகிறது.

சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று ஒருவர் பஞ்சாயத்தை கூட்டியபோது, இல்லை.. இல்லை.. இக்கதை நான் முன்னரே உருவாக்கி வைத்துள்ள கதை. இதுசிவாஜிகணேசன் சம்பவத்தில் பொறிதட்டி பிறந்த கதை என்று கூறியிருந்தார் முருகதாஸ்.

Advertisment

சர்க்கார் டீசரில், ’ஐ ஆம் எ கார்ப்பரேட் கிரிமினல்’, ‘உங்க ஊர் தலைவனை தேடிப்பிடிங்க. இதுதான் நம்ம சர்க்கார்’ என்று பஞ்ச் வசனங்கள் பேசியுள்ளார் விஜய். இது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

AR MURUGADAS sarkaar vijay
இதையும் படியுங்கள்
Subscribe