Advertisment

எந்த திருட்டாக இருந்தாலும் தப்புதான் - சர்கார் விவகாரம் - இயக்குநர் கே.பாக்கியராஜ் exclusive interview

k bhagyaraj exclusive interview

தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது புதிது கிடையாது. பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்கள் படங்கள் வரும்போது பூதாகரமாக இது எழும். அதுபோன்ற பிரச்சனையில் தற்போது சிக்கியுள்ள படம் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார்.

Advertisment

இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், நக்கீரன் ஸ்டூடியோ இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.

Advertisment

சர்கார் பட பிரச்சனை எங்கு துவங்கியது?

வருண் என்கிற ராஜேந்திரனை எனக்கு இதுவரை தெரியாது. புகார் கடிதம் ஒன்றை அவர் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தபோதுதான் அவரை தெரியும்.

இன்னொன்று எனக்கும் சன் குழுமத்திற்கோ, எனக்கும் விஜய்க்கோ, எனக்கும் முருகதாஸ் அவர்களுக்கோ உள்ள பிரச்சனை கிடையாது.

எங்கள் சங்கத்தில் உள்ள எழுத்தாளருக்கும், அதே சங்கத்தில் உள்ள முருகதாஸ் அவர்களுக்கும் உள்ள பிரச்சனை.

ஒரு எழுத்தாளரிடம் நியாயம் இருக்கிறபோது அவர் சின்ன ஆளா, பெரிய ஆளா என்று பார்க்க முடியாது. யாரை எதிர்த்து பேசப்கோகிறோம், அவர் பெரிய ஆளா, சின்ன ஆளா என்று பார்க்க முடியாது.

10 வருடத்திற்கு முன்னரே எழுதி பதிவு செய்து வைத்திருந்த கதைதான் சர்கார் என்று வருண் என்பவர் புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரை உடனே நான் ஏற்கவில்லை. ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டேன்.

சர்கார் படக்குழு நிகழ்ச்சியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார்கள். அது அடங்கிய ஒரு சிறிய பேப்பர் கட்டிங் கொடுத்தார். அதை காண்பிக்கும்போது இரண்டு கதைகளின் சாரம்சமும் ஒன்றாக இருந்தது.

முருகதாஸிடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று அவரை அழைத்துப் பேசினோம். காசு, பணத்திற்காக சிலர் இதுபோல தனது கதை என புகார் கொடுக்கிறார்கள் என்றார்.

காசுக்காக இல்லை, புகார் கொடுத்த வருணிடம் நன்றாக விசாரித்துவிட்டோம் என்று எவ்வளவோ பேசி பார்த்தேன். ஆனால் முருகதாஸ் கோர்ட்டில் பார்த்துக்கொள்வதாக கூறினார்.

பின்னர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, வருணையும் அழைத்து, 10 வருடத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட கதையை எடுத்து வரச்சொல்லி, படித்து பார்த்தோம். அதேபோல் முருகதாஸ் கதையையும் படித்து பார்த்தோம். இரண்டு கதைகளின் சாரம்சமும் ஒன்றாக இருந்தது.

முருகதாஸிடம், இரண்டு கதையும் ஒன்றாக இருப்பதாக சொன்னோம். அதற்கு அவர் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

பின்னர் சங்க நிர்வாகிகள், முருகதாஸ் ஒத்துவரவில்லை என்றால் வருண் புகார் தொடர்பாக சங்கத்தின் சார்பாக ஒரு கடிதம் வெளியிட்டு விடலாம். அதில், இரண்டு கதையும் ஒன்றுதான். இதை மீறி நீங்கள் எந்த நடவடிக்கைக்கும் போகலாம் என்று சொல்லிவிடலாம் என்று முடிவு எடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டோம்.

இதற்கிடையில் விஜய்யிடம் தொடர்பு கொண்டு, இந்த விவகாரம் குறித்து பேசினேன். மிகவும் கஷ்டமாக இருக்கிறது, முருகதாஸிடம் பேசி பார்த்தேன். எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்றேன்.

அதற்கு விஜய், நீங்க ஏன் சார் தர்ம சங்கடப்படுகிறீர்கள். நீங்க முறைப்படி என்ன செய்யணுமோ அதை செய்யுங்க, அவர்தான் கோர்ட்டுக்கு போகிறேன் என்றால் போய் பார்த்துக்கொள்ளட்டும் என்றார்.

எனது மகன் விஜய் ரசிகர். அவன் என் மீது கோபமாக இருக்கிறான். எனது குடும்பத்தினரும் இந்த விசயம் குறித்து பேசினார்கள். வெளியில் சில இடங்களுக்கு போகும்போது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள். எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது.

சில பொறுப்புக்கு வரும்போது சில கல்லடிகள் விழத்தான் செய்யும். கஷ்டங்கள் வரத்தான் செய்யும், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

விஜய்யிடம் பேசும்போது இந்த விவகாரம் அவருக்கு ஏற்கனவே தெரியும் என்று சொன்னாரா?

நான் சொல்லித்தான் இந்த விஷயமே தனக்கு தெரியும் என்றார். முருகதாஸ் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறார் என தெரிவித்தை சொன்னேன்.

அதற்கு விட்டுடுங்க, உங்க புரொஷிஜர் என்னவோ அதை சரியாக பண்ணுங்க அவ்வுளவுதான். அவர் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லும் போது நீங்க ஏன் கவலைப்படுறீங்க என்றார்.

k bhagyaraj exclusive interview

நீங்கள் வெளியிட்ட கடிதத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்தால் தடுக்க மாட்டோம். முழுமையாக உதவ முடியாததற்கு வருந்துகிறோம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த பின்புலமும் இல்லாத ஒரு உதவி இயக்குநர் புகார் கொடுத்திருக்கிறார், அந்த புகாரில் உண்மை இருக்கிறது என்று சங்கம் முடிவு எடுத்துள்ளது. சங்கம் உதவ முடியவில்லை என்றால் ஒரு தனி மனிதனாக ஒரு பெரிய இயக்குநர், ஒரு பெரிய பட நிறுவனத்தை, ஒரு பெரிய நடிகரை எதிர்த்து அவரால் என்ன பண்ண முடியும்.

உதவி இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொருவரும் அப்படி கஷ்டப்பட்டு வந்தர்கள்தான்.

முருகதாஸ் அப்படி கஷ்டப்பட்டு வந்தவர்தான். ஒரு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் சங்கத்தில் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

அப்படி விதிமுறைகளை மீறினால் மற்ற சங்கங்கள் கண்டிக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். அப்போதுதான் கோர்ட்டுக்கு செல்லாமல் பிரச்சனையை முடிக்க முடியும்.

தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று சொல்லிவிட்டார்கள். கோர்ட்டில் பிரச்சனை இருக்கிறது. என்ன ஆகும்?

என்ன ஆகுமென்று தெரியாது. நமக்கு தோன்றியபடி நியாயப்படி என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லிவிட்டோம். கடிதமாக கொடுத்துவிட்டோம்.

என்ன நடந்தது என்று கோர்ட் கேட்கும்போது, நடந்ததை கோர்ட்டில் சொல்லுவேன். கோர்ட் என்ன முடிவு எடுக்கும் என்பது எனக்கு தெரியாது.

பொதுவாக சினிமாவில் கதை விவகாரம் தொடர்ந்து இதேபோல் இருந்து வருகிறது. நீங்கள் என்ன அறிவுரை சொல்ல நினைக்கிறீர்கள்?

பொதுவாகவே எந்த திருட்டாக இருந்தாலும் தப்புதான். திருட்டு என்பது இருக்கக்கூடாது. இங்க கொஞ்சம், அங்க கொஞ்சம் என எடுக்கும்போது அதற்குள்ள மரியாதை இருக்காது. பணம் சம்பாதிக்கலாம், ஆனால் இந்த துறையில் நல்ல பெயர் எடுக்க முடியாது. எப்போதும் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.

sarkar interview exclusive k bhagyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe