சர்கார் திரைப்படத்திற்கு எதிராக மதுரையில் அதிமுகவினர் போராட்டம். திரையரங்கை எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் உள்ள அண்ணா நகர் திரையரங்கத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

Advertisment

சர்கார் படத்தில் ஜெயலலிதாவை இழிவுப்படுத்தும் விதமாக இருக்கின்ற காட்சிகளை சென்சார் செய்த பின்புதான் வெளியிட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று ரஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

முன்னதாக சர்கார் படத்தில் ஜெயலலிதாவை இழிவுப்படுத்தி விட்டதாகவும், அந்த படம் வன்முறையை தூண்டுகிறது என்று சட்ட அமைச்சர் சிவி சண்முகம் கூறியிருந்தார். மேலும் அந்த படத்தின் மீது நடவடிக்கை எடுக்க இன்று ஆலோசனையும் மேற்கொண்டார்.