புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் போஸ்டர் வெளியிட்டது தொடர்பாக இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் நடிகர் விஜய், சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சன்பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் ஃபஸ்ட் லூக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளில் வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிறில் அலெக்சாண்டர் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 Actor Vijay and SunPictures are the directors of Chennai's Supreme Court

Advertisment

அதில் நடிகர் விஜய், படத்தின் இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் ஆகியோர் புகைப் பிடிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் போஸ்டர் வெளியிட்டதால் ராயப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூபாய் 10 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நடிகர் விஜய், சன்பிகசர்ஸ், முருகதாஸ்மற்றும் மத்திய, மாநில அரசுகள் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க அளிக்க உத்தரவிட்டனர்.